கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அமெரிக்காவிலிருந்து நேற்று விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பொருள்களை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அமெரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தல்! - அமெரிக்காவிலிருந்து பெங்களூர் வந்த விமானத்தில் போதை பொருள் கடத்தல்
பெங்களூரு: அமெரிக்காவிலிருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பார்சலில் 72 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் இருப்பதை சுங்கத் துறை அலுவலர்கள் கண்டுபிடித்து பறிமுதல்செய்தனர்.

அப்போது, பொம்மை, வாட்டர்கலர் கிட் இருந்த பார்சலை சோதனை செய்தபோது, அந்தக் கவரில் ஏதோ மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பார்சலைப் பிரித்து பார்க்கையில், சுமார் 448 கிராம் போதைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு, சுமார் 72 லட்சம் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இது குறித்து சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முன்னதாக, பெங்களூரு சாலையில் ரூபாய் 50-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த போதைப்பொருள் சாக்லேட்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தது குறிப்பிடத்தக்கது.