கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருள்கள் கடத்தல் விவகாரத்தில் அகமது என்பவரை காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், விமானம் மூலம் போதைப்பொருள்கள் கடத்திவரவுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தியவர் கைது! - கெம்பகவுடா விமான நிலையம்
பெங்களூரு: கர்நாடகாவில் விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தி வந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Cannabis supplier arrested by police
இதையடுத்து, பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பயணிகளிடம் நடத்திய சோதனையில், ஒருவர் மின்னணு சாதனங்களில் மறைத்துவைத்து எட்டு கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கொண்டுவந்தது தெரியவந்துள்ளது.
இதன் மதிப்பு ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கஞ்சா கடத்தி வந்தவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.