தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் வெள்ளத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு! - அஸ்ஸாமில் வெள்ளத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

அஸ்ஸாமில் வெள்ளத்தால் மேலும் ஒருவர் உயிரிழந்தார். தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

10 people dead in asam fled
Asam in fled

By

Published : Jun 3, 2020, 11:40 PM IST

அஸ்ஸாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (ஏ.எஸ்.டி.எம்.ஏ) வெளியிடப்படும் தினசரி வெள்ள அறிக்கையின்படி, கோல்பாரா மாவட்டத்தின் லக்கிபூரில் ஒருவர் வெள்ளத்தால் இறந்துள்ளார். இதனால், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கோல்பாரா, நாகான், ஹோஜாய், கச்சார் ஆகிய நான்கு மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோல்பாரா மாவட்டம், 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹோஜாய் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரும், நாகான் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 650 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை வரை, மூன்று மாவட்டங்களிலும் சுமார் 1 லட்சத்து 56ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். கோல்பாராவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு நபர்களை வெள்ளத்திலிருந்து மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

தற்போது, ​​212 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் 22ஆயிரத்து 718 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன.

ABOUT THE AUTHOR

...view details