நம்மில் பலருக்கு அத்தியவாசிய காலை உணவாக இருப்பது இட்லி என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த வயாதானோர் வரை எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற உணவு இட்லி. நோயாளிகளும், உணவுக் கட்டுபாட்டில் இருப்பவர்களுக்கும் மென்மையான இட்லி மீது எப்போதுமே தனி ஈர்ப்பு உண்டு.
வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் பலர் இட்லியையே விரும்பி உண்கின்றனர். இந்த இட்லியைப் பல்லாண்டுகளாக தென்னிந்தியர்கள் சாப்பிட்டு வந்தாலும், அதன் பூர்விகம் இந்தியா இல்லை என்றால் நம்பமுடிகிறதா...? ஆனால் அதுதான் உண்மை. இந்தோனேசியாவில் இதை `கெட்லி” (Kedli) என்பார்கள். அதுதான், பிற்காலத்தில் `இட்லி’ என மருவியது என்றும், கன்னட மக்கள் பயன்படுத்திய இல்லாலிகே உணவுதான் 'இட்லி' என்றும் பல வரலாறு சான்றுகள் சொல்லப்படுவதுண்டு.