தெலங்கானா முலுகு பகுதியைச் சேர்ந்தவர் சீதக்கா. மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த இவர், அந்த அமைப்பிலிருந்து விலகி, ஜனநாயக பாதைக்குத் திரும்பினார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். இந்நிலையில் முழு அடைப்பு காலத்தில், ஏழைகளுக்கு உதவுவதோடு தனது தொகுதியின் பழங்குடிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களையும் விநியோகித்து வருகிறார்.
இந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கிட்டத்தட்ட 30 ஆயிரம் கிலோகிராம் அரிசி, மற்றும் காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை பழங்குடியினருக்கும், முலுகுவில் வசிக்கும் மற்றவர்களுக்கும் விநியோகித்து வருகிறார்.
இது பற்றி சீதக்கா கூறுகையில், 'கடந்த 36 நாட்களாக, மாநிலத்தின் 296 கிராமங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சென்று அரிசி, காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறேன். எனது கட்சிப் பணியாளர்கள் அத்தியாவசியப் பொருள்களை மேலும் 60 கிராமங்களில் விநியோகித்துள்ளனர்.