இந்தியா முழுதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் நவராத்திரி விழா கோலகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த வருடத்திற்கான நவராத்திரி விழா நாளை முதல் தொடங்குகிறது. மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு பூஜைகளும், கொண்டாட்டங்களும் இடம்பெறும்.
தமிழ்நாட்டில் தெய்வங்களின் உருவ பொம்பைகளையும், புராண கதைகளான மகாபாரதம், ராமாயணம், கிருஷ்ணனின் வாழ்க்கை, மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரின் திருமணம், போன்ற பல்வேறு நிகழ்வுகளையும் குறிக்கும் விதமான பொம்மைகளையும் வீட்டில் வைத்து மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
இந்த நவராத்திரி விழாவானது வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். அதிலும் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் நவராத்திரி பண்டிகையின்போது பல்வேறு கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். இந்த பண்டிகையை அங்குள்ள குழந்தைகள், இளம் வயதினர், பெரியோர் என அனைவரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அவர்கள் தங்களின் சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் புது வகையான கர்பா இசையில் பாரம்பரிய நடனங்களை ஆடுவர்.