குஜராத் மாநிலத்தில் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அங்கு அரசியல் கட்சிகளின் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. என்னதான் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்தாலும் சன்காத் மக்களவைத் தொகுதியில் உள்ள மால் கிராம மக்கள் பல கிலோமீட்டர் தினமும் நடந்து சென்று அடி குழாய் ஒன்றில் கிடைக்கும் அழுக்கடைந்த நீரை குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கிராமத்தில் சுமார் 700 அடிவரை போர் போட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. 434 வாக்காளர்கள் உள்ள இந்த கிராமத்தில் தண்ணீர் என்பது எட்டாத கனியாகவே இருக்கிறது.
அழுக்கு நீரை குடிநீராக சேகரிக்க பல கிலோமீட்டர் நடக்கும் கிராம மக்கள்... - குடிநீர்
குஜராத்: சன்காத் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மால் கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அடி குழாய் ஒன்றில் கிடைக்கும் மாசடைந்த நீரை எடுத்து வந்து அன்றாடம் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தினந்தோறும் பல வாகனங்களில் வேட்பாளர்கள் வருகின்றனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்துச் செல்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றால், செய்வதாக உறுதியளிக்கும் இவர்களுக்கு, கோடைக் காலத்தில் நீண்ட தூரம் நடந்து சென்று அழுக்கு தண்ணீரை சேகரித்து வரும் கஷ்டம் தெரிவதில்லை. தேர்தலுக்கு முன்பே யார் குடிநீர்ப் பிரச்னையை தீர்த்து வைக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்களிக்கவுள்ளோம்' என்று தெரிவித்தனர்.