தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி பாஜக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு! - delhi assembly election

டெல்லி: மனோஜ் திவாரியை முன்னிறுத்தி டெல்லி பாஜக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளது.

Manoj tiwary becomes the BJP CM candidate in Delhi

By

Published : Nov 24, 2019, 7:32 PM IST

டெல்லி மாநில சட்டபேரவைத் தேர்தலுக்கு அம்மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், அந்த மாநிலத்தின் பாஜக முதலமைச்சர் வேட்பாளராக மாநில தலைவரான மனோஜ் திவாரி அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்த தகவலை தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை மனோஜ் திவாரியை முன்னிறுத்தி சந்திக்கப் போகிறோம் எனவும் அவர் தெரிவித்தார். ஆக, மனோஜ் திவாரி முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற (2020) பிப்ரவரி மாதம் தேர்தல் நடக்கிறது. 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: ஆம் ஆத்மி தேர்தல் பரப்புரை நாளை தொடக்கம்.!

ABOUT THE AUTHOR

...view details