தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கெஜ்ரிவால் அரசு மீது மனோஜ் திவாரி தாக்கு! - New Delhi

டெல்லி: நாட்டில் முழு அடைப்பு அமலில் உள்ள நிலையில் டெல்லி மக்களுக்கு உரிய வசதிகளை மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்து கொடுக்கவில்லை என பாஜக மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான மனோஜ் திவாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

manoj tiwari  manoj tiwari slammed Arvind  Aam Aadmi Party  New Delhi  கரோனா பாதிப்பு, கோவிட்-19 பெருந்தொற்று, முழு அடைப்பு, டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவால், வெளிமாநில தொழிலாளர்கள்
manoj tiwari manoj tiwari slammed Arvind Aam Aadmi Party New Delhi கரோனா பாதிப்பு, கோவிட்-19 பெருந்தொற்று, முழு அடைப்பு, டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவால், வெளிமாநில தொழிலாளர்கள்

By

Published : May 4, 2020, 7:28 PM IST

பாஜக மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான மனோஜ் திவாரி, ஈடிவி பாரத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “நாட்டில் முழு அடைப்பு (லாக்டவுன்) அமலில் இருக்கும் நிலையில், டெல்லி அரசாங்கம் மக்களுக்கு உணவு, மருத்துவம் மற்றும் உறைவிடம் என எந்த வசதியையும் செய்துகொடுக்கவில்லை.

டெல்லி மக்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்கவில்லை. இந்தப் பெருந்தொற்று நெருக்கடியால் மக்கள் உணவின்றி தவிக்கின்றனர். அவர்களை, அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பட்டினிப்போட்டு கொல்கிறது.

டெல்லியில் வெளிமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே தவித்துவருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, சிறப்பு ரயில்கள் மூலம், சொந்த மாநிலத்துக்கு அவர்கள் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

மேலும், “டெல்லியில் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பா.ஜனதா தொண்டர்கள் உணவு வழங்கி வருகின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பு, மாநிலங்கள் வாரியாக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details