ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரிஷ் சந்திர முர்மு நேற்று (ஆக.5) திடீரென ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
அதனால் அவரது பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த நிர்வாகியுமான மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிரிஷ் சந்திர முர்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டபோது துணைநிலை ஆளுநராக பதவியேற்றார். அதையடுத்து ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாளில் ராஜினாமா செய்துள்ளார்.
60 வயதான அவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அலுவலர் ஆவார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது முதன்மை செயலாளராக பணியாற்றினார். மேலும் முர்முவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 'ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதே கனவு' - துணைநிலை ஆளுநர் பேச்சு