தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் விளையும் தேயிலைக்கு இம்புட்டு விலையா..? - அஸ்ஸாம்

திஸ்பூர்: அஸ்ஸாமில் விளையும் மனோஹரி தேயிலையின் ஒரு கிலோ `டீ` தூள் ஐம்பதாயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

Manohari Tea creates history again

By

Published : Jul 30, 2019, 12:29 PM IST

அஸ்ஸாமில் அதிக அளவு பரப்பளவில் விவசாயிகள் தேயிலை பயிரிட்டு வருகின்றனர். தேயிலை பறிக்கச் செல்வதேஇங்குள்ள மலைவாழ் மக்களின் பிரதான தொழிலாக இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலம் என்றாலே முதலில் நியாபகம் வருவது அம்மாநிலத்தின் `டீ`தான். அந்தளவு எல்லோருடைய மனதையும் கட்டிப்போடக்கூடிய மணம் பெற்றிருப்பது அஸ்ஸாம் டீயின் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

உலக மார்க்கெட்டில் கூட அஸ்ஸாம் டீத்தூளுக்கு அதிக மவுசு உள்ளது. அந்த வகையில், மனோஹரி டீயின் விலை வரலாற்றிலேயே இல்லாத அளவு விற்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ மனோஹரி கோல்ட் டீ தூளின் விலை ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. சென்ற ஆண்டு ஒரு கிலோ டீ தூளின் விலை ரூ. 39,000க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details