மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் உத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் பரப்புரை செய்யும் நட்சத்திர பேச்சாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
40 நட்சத்திர பேச்சாளர்கள் கொண்ட பட்டியலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜோதி ராதித்யா சிந்தியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.