தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நியாய் திட்டம் நடுத்தர மக்களை பாதிக்காது -மன்மோகன் சிங்

டெல்லி: நியாய் திட்டத்தைச் செயல்படுத்தும் போது நடுத்தர மக்கள் மீது வரிகள் ஏதும் விதிக்கப்படாது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Manmohan singh talks about NYAY plan

By

Published : Apr 21, 2019, 5:17 PM IST

காங்., தலைவர் ராகுல் காந்தி முன்னதாக குஜராத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக அரசு செயல்படுத்தியுள்ள பணமதிப்பிழப்பு திட்டம் பொது மக்களை வெகுவாக பாதித்துள்ளது. அதனால் காங்கிரஸ் ஆட்சியில் புதிய திட்டமாக ’நியாய் திட்டம்’ கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நியாய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நியாய் திட்டத்தைச் செயல்படுத்தும் போது நடுத்தர மக்கள் மீது வரிகள் ஏதும் விதிக்கப்படாது. இது வல்லுநர்கள் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, மொத்த உற்பத்தியிலிருந்து 1.2 விழுக்காடு முதல் 1.5 விழுக்காடு வரை மட்டுமே செலவாகும். இதன் மூலம் நியாய் திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details