தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மன்மோகன் சிங் உடல்நிலை எப்படி உள்ளது - மருத்துவமனை வட்டாரம் புது தகவல்? - மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Manmohan Singh
Manmohan Singh

By

Published : May 11, 2020, 12:11 PM IST

Updated : May 11, 2020, 1:16 PM IST

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு நெஞ்சு வலி காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அவருக்கு கொடுக்கப்படும் மருந்துகளுக்கு அவரது உடல் நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் அவருக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் குறித்தும் தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனையிலுள்ள இதய நோய் சிறப்பு மையத்தில் மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

87 வயதாகும் மன்மோகன் சிங் 1982 முதல் 1985ஆம் ஆண்டுவரை ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராகவும் இருந்தார். மேலும், 1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் 2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தார்.

முன்னதாக 2009ஆம் ஆண்டு அவர் பிரதமராக இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: 10 மாநிலங்களில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை - ஹர்ஷ் வர்தன்

Last Updated : May 11, 2020, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details