தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர் விவகாரம்; முன்னாள் பிரதமர் கருத்து! - காஷ்மீர் விவகாரம்

டெல்லி: இந்தியா எனும் கருத்தாக்கத்தை பாதுகாக்க, குடிமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Manmohan singh

By

Published : Aug 13, 2019, 5:23 AM IST

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், "நாட்டில் உள்ள பலருக்கும் இந்த முடிவில் விருப்பம் இல்லை. அனைத்து மக்களின் கருத்துகளையும் கேட்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில், மக்கள் அனைவரும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா என்னும் கருத்தாக்கத்தை பாதுகாக்க முடியும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details