தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'முதலில் நாட்டை கவனிக்க வேண்டும்' - மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி.!

டெல்லி: கரேனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில், செர்பியா நாட்டிற்கு 90 டன் மருத்துவ உபகரணங்களை அனுப்பியது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

manish-tewari
manish-tewari

By

Published : Apr 1, 2020, 11:47 AM IST

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்கான மருத்துவச் சிகிச்சை வழங்குவதற்குப் போதுமான மருத்துவ உபகரணங்கள் இருக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் தொற்றின் அளவு மக்களை அச்சமடைய வைக்கிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் அளிக்காததால், மருத்துவர்களும் நோய் தொற்றுக்கு உள்ளாகிவருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அரசு செர்பியா நாட்டிற்கு 90 டன் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது அரசியல் தலைவர்கள், சுகாதாரத் துறையினரிடைய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவர நமது நாடே மருத்துவ தேவைக்காக வெளிநாட்டை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், செர்பியா நாட்டிற்கு 90 டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்களை அனுப்பியது ஏன் என்றும், இது குற்றச் செயல் என்றும் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.

இதையும் பார்க்க :தூய்மைப் பணியாளரை கவுரவித்த பஞ்சாப் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details