நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து மணிப்பூர் முதலமைச்சர் பேசுகையில், மருத்துவ, தொழில்துறை வளர்ச்சிக்காக கஞ்சா உபயோகத்தை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதித்து அடுத்து நடைபெறவுள்ள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.