தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாகா ஒப்பந்தம்: பிரதமரை சந்திக்க காங்கிரஸ் குழு திட்டம்

டெல்லி: நாகா ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவிருப்பதாக மணிப்பூர் காங்கிரஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Manipur Congress delegation to meet PM Modi over Naga pact

By

Published : Nov 15, 2019, 10:10 AM IST

வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு நாகா அமைதி ஒப்பந்தத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.

இதற்கு முன்னதாக மணிப்பூர் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரசின் மூத்தத் தலைவருமான ஓக்ரம் ஐபோபி சிங் தலைமையில் 15 பேர் கொண்ட குழு பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

இந்த நிலையில் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்புப் பேட்டியளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மேகசந்திரசிங், "கிரேட்டர் நாகாலாந்து (மிகப்பெரிய நாகாலாந்து) என்ற முழக்கம் எங்களுக்கு ஒருவித அச்சத்தை கொடுக்கிறது. ஏனெனில் அந்தப் பகுதிகள் மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இருக்கலாம் என நாங்கள் அஞ்சுகிறோம்.

தங்குல் நாகா (Tangkhul Naga) என்ற பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் உக்ருல் (Ukhrul) மாவட்டம் மணிப்பூரில் உள்ளது. நமது மாநிலத்தில் நாகா மக்கள் வசிக்கும் மலைப்பகுதிகள் உள்ளன. அவை மாநிலத்தின் புவியியலில் 90 விழுக்காட்டை உள்ளடக்கியது.

அங்கு 10 விழுக்காடு இஸ்லாமியர்களும் வாழ்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் கிளர்ச்சி, பயங்கரவாத தாக்குதல்களை நாங்கள் விரும்பவில்லை. அதேபோல் எங்கள் மாநிலத்தின் எல்லை பகுதிகளையும் விட்டுக்கொடுக்கத் தயராக இல்லை” என்றார்.

மணிப்பூர் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஓக்ரம் ஐபோபி சிங்கும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். நாகா ஒப்பந்தம் தொடர்பாக அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனவால் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை ஏற்கனவே சந்தித்துப் பேசியது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க : நாகாலாந்து அமைதி ஒப்பந்தம் குறித்து அசாம் முதலமைச்சர் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details