கிழக்கு இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அஸ்ஸாம் ரைப்பிள் படையினர், மணிப்பூரில் உள்ள டேங்நௌபல் மாவட்டத்தின் குடெங்தாபி பகுதியில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு உரிய வகையில் நபர் ஒருவர் ஒரு பையை வைத்துக் கொண்டு சுற்றித் திரிந்தார்.
இதைக்கண்ட ரைப்பிள் படையினர் அவரிடமிருந்த பையைச் சோதனை செய்தனர். அதில், ரூ.92 லட்சம் மதிப்புள்ள 19 பாக்கெட் தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் இருந்தது தெரிய வந்தது.