கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், பத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மூன்று மஜத எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு சபாநாயகரிடம் நேரம் கேட்டுள்ளார்.
பத்திரிகையாளரை மிரட்டிய தேவகவுடா மகன்: வீடியோ வைரல்!
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சரின் சகோதரரும், அமைச்சருமான ஹெச்.டி.ராவணா, பத்திரிகையாளர் எடுத்த வீடியோவை நீக்கச் சொல்லி மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பத்திரிகையாளரை மிரட்டி தேவகவுடா மகன்: வீடியோ வைரல்!
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் சகோதரரும், அமைச்சருமான ஹெச்.டி.ராவணா, ஆட்சி நீடிக்க வேண்டும் என கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனையறிந்த அமைச்சர், பத்திரிக்கையாளரை காவல் துறையின் உதவியுடன் மிரட்டி அந்த வீடியோவை நீக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.