தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேனகா காந்தியின் இணையதளம் முடக்கம் - கேரளா யானை

திருவனந்தபுரம்: பாஜக மூத்தத் தலைவரான மேனகா காந்தி நடத்தும் விலங்குகளின் நல அமைப்பின் இணையத்தளத்தை கேரளா எத்திக்கல் ஹேக்கர்ஸ் முடக்கினர்.

மேனகா காந்தி
மேனகா காந்தி

By

Published : Jun 6, 2020, 3:39 AM IST

கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில், “மலப்புரம் மாவட்டம் குற்ற செயல்களில் ஈடுபடுவதில் பெயர்போனது என மேனகா காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது.

இந்நிலையில் மேனகா காந்தி நடத்தும் விலங்குகள் நல அமைப்பின் (People for Animals) அதிகாரப்பூர்வ இணையதளத்தை கேரளாவைச் சேர்ந்த எத்திக்கல் ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளனர்.

இந்த முடக்கப்பட்ட இணையதளத்தின் பின்புறம் சமூக வலைதளங்களில் காஃபின்ஸ் பாட்டு என்று கூறப்படும் பிரபலமான சாப்பெட்டி நடனப் பாட்டு இடம் பெற்றிருந்ததோடு, பிரபலமான முகக்கவச புகைப்படமும் (guy fawkes mask) இணைக்கப்பட்டிருந்தது. மேலும், “விலங்குகள் மீதுள்ள அன்பினால், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை திணிப்பது சரியன்று. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாலக்காட்டில் நடந்த சம்பவத்தை மலப்புரத்தில் நடந்ததாக சித்தரித்து இஸ்லாமியர்களை குறிவைத்து தவறான பரப்புரையில் ஈடுபடுவது அரசியல் உள்நோக்கம்தான் காரணம்.

இஸ்லாமியர் அமைப்பைச் சேர்ந்த முனவரலி ஷிஹாப் தங்கலும் கோயில் அர்ச்சகரும் இணைந்து மலப்புரத்தில் மரம் நட்டுள்ளோம். மலப்புரத்தில் இந்து - இஸ்லாமியர்கள் சகோதரத்துவத்தோடு வாழ்ந்துவருகிறோம். அதுவும் இந்த மாவட்டத்திற்கு அதுகுறித்து பல ஆண்டுகால வரலாறு உண்டு. இந்த மதசார்பின்மை தகவலை உலக சுற்றுச் சூழல் தினமான இன்று மலப்புரம் பற்றி தவறாக பேசி வருபவர்களுக்கான தகவலாக இருக்கட்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் கர்ப்பிணி யானையைக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கேரளா வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'14 நாள்கள் பட்டினி' - கர்ப்பிணி யானையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ABOUT THE AUTHOR

...view details