தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாயாவதி காசு வாங்காமல் எதுவும் பண்ணமாட்டார்...! மேனகா காந்தி குற்றச்சாட்டு - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பணம் வாங்காமல் யாருக்கும் தேர்தலில் இடம் அளிக்கமாட்டார் என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மேனகா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

mayawati, meneka gandhi

By

Published : Apr 4, 2019, 10:51 AM IST

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தாபூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், 'எம்.பி., எம்எல்ஏ சீட்டுகளை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பணத்துக்காக விற்பனை செய்கிறார். பணம் வாங்காமல் அவர் எதையும் செய்யமாட்டார். பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகிறார்' என்று விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், தனது கட்சி உறுப்பினர்களிடமே காசு வாங்கும் மாயாவதி, நாட்டையும், நாட்டு மக்களையும் எப்படி விட்டு வைப்பார் என குற்றம்சாட்டினார்.


ABOUT THE AUTHOR

...view details