தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பான் - ஆதார் கார்டுகளை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு! - PAN-Aadhaar

டெல்லி: பான் - ஆதார் அட்டைகளை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய நேர்முக வருமான வரித்துறை ஆணையம் (CBDT) அறிவிப்பு விடுத்துள்ளது.

Mandatory to link PAN-Aadhaar by Dec 31: I-T Dept
Mandatory to link PAN-Aadhaar by Dec 31: I-T Dept

By

Published : Dec 16, 2019, 11:10 AM IST

பான் - ஆதார் அட்டைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த அட்டைகளை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது டிசம்பர் 31ஆம் தேதியே இதற்கான கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வருமான வரி ஏய்ப்பினை அகற்ற இதற்கு ஒத்துழைக்குமாறு வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வருமான வரித்துறைக்கு மத்திய நேர்முக வருமான வரித்துறை ஆணையம் இதனை வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் திட்டம் அரசியலமைப்பின் கீழ் செல்லுபடியாகும். எனவே வருமான வரித்துறை விபரங்களுக்கும் பான் கார்டு வழங்குவதற்கும் ஆதார் அவசியம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது.

வருமான வரி சட்டப்பிரிவு 139 AA (2), 2017 ஜூலை 1ஆம் தேதி தொடங்கி பான் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை வரித்துறை அலுவலர்களிடம் தெரிவிக்கவேண்டும் என்கிறது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் - ஆதார் கார்டுகளை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரும் 18ஆம் தேதி கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் - வரிகளை உயர்த்த மத்திய அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details