பிரிட்டன் நாட்டின் பரபரப்பான மான்செஸ்டர் நகரில் அமைந்துள்ள வணிக வளாகத்துக்கு 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று வந்துள்ளார்.
அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து வருவோர் போவோர் என கண்ணில் பட்டவர்களையெல்லாம் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை கைது செய்துள்ளனர். அவர் மீது பயங்கராவதிகள் மீது பதியப்படும் வழக்கு போடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்தில் காயமடைந்த 19 வயது பெண், 50 வயது முதியவர் உள்ளிட்ட ஐந்து பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.