கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோயில்களை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா: மணக்குள விநாயகர் கோயில் விழாக்கள் ரத்து - Puducherry news
புதுச்சேரி: கரோனா தொற்று காரணமாக மணக்குள விநாயகர் கோயிலின் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மணக்குள விநாயகர் கோயில்
இந்நிலையில், வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோயிலில்ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அன்றைய தினம் மூலவர் ஸ்ரீ மணக்குள விநாயகர் மற்றும் உற்சவ விநாயகர் தங்க கவசத்துடன் அருள்பாலிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ள 77ஆம் ஆண்டு திருபவித்ரோற்சவ விழாவும் பொதுமக்கள் நலன் கருதி நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.