தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் தங்கத்தேர் பாகங்கள் மாயம்!

புதுச்சேரி: மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான தங்கத்தேரின் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பாகங்கள் திடீரென மாயமாகியுள்ளன.

ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் தங்கத்தேர் பாகங்கள் மாயம்!
ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் தங்கத்தேர் பாகங்கள் மாயம்!

By

Published : Dec 14, 2020, 1:34 PM IST

உலகப் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகத் திகழ்ந்துவருகிறது, புதுச்சேரி ஒயிட் டவுனில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில். இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக வெள்ளித்தேர், தங்க ரதம் போன்றவையும் உள்ளன. இந்தத் தேர்கள் பல லட்ச ரூபாய் மதிப்பிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தத் தங்கத்தேரின் பல்வேறு பாகங்களைக் காணவில்லை. மேலும் அதில் இருந்த சிற்பங்களும் திடீரென மாயமாகியுள்ளன. இது தொடர்பாக, புதுச்சேரி திருக்கோயில்கள் பாதுகாப்புக் குழு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு புகார் மனு ஒன்றினை வழங்கியுள்ளது.

ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான தங்கத்தேரின் அடிப்பாகங்கள் வேறு கோயிலுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

எனவே இது குறித்து துணைநிலை ஆளுநர் உடனடியாக உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனப் புதுச்சேரி திருக்கோயில் பாதுகாப்புக் குழு, ராஜ்நிவாஸ் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளது.

இதையும் படிங்க...'கொள்கைகள் மூலம் சமூகத்தைப் பிளவுபடுத்துவோர்களே பிரிவினைவாதிகள்'

ABOUT THE AUTHOR

...view details