தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துபாயிலிருந்து திரும்பியவர் தூக்கிட்டுத் தற்கொலை! - man commit suicide

லக்னோ: சமீபத்தில் துபாயிலிருந்து உத்தரப் பிரதேசம் திரும்பிய இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயிலிருந்து திரும்பியவர் தூக்கிட்டு தற்கொலை!
துபாயிலிருந்து திரும்பியவர் தூக்கிட்டு தற்கொலை!

By

Published : Jun 3, 2020, 7:18 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம், பண்டா மாவட்டம் சுவராஜ் காலனியில் வசித்துவந்த மனோஜ் குப்தா (26) மேலாண்மைப் பிரிவில் தேர்ச்சிப் பெற்றவர். படிப்பு முடிந்த சில நாள்களிலேயே வேலைக்காக துபாய் சென்றார். சமீபத்தில் துபாயிலிருந்து தனது வீட்டிற்குத் திரும்பிய இவர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து அவரின் குடும்பத்தினர் கூறும்போது, "நாங்கள் வீட்டின் மேல்தளத்தில் இருக்கும்போது மனோஜ் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை" என்றனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது உயிரிழந்த மனோஜின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னர் மேற்படி விசாரணை தொடரும்” என்றனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் எம்.பி.ஏ. மாணவி மானபங்கம்!

ABOUT THE AUTHOR

...view details