தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் 20 மணி நேரத்திற்கு பின் மீட்பு!

ஹைதராபாத்: மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சரூர் நகர் குளத்தில் மூழ்கியவரின் உடல் 20 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது.

By

Published : Sep 22, 2020, 5:12 PM IST

man-washed-away-into-hyderabads-saroornagar-tank-in-heavy-rains-body-recovered-20-hours-later
man-washed-away-into-hyderabads-saroornagar-tank-in-heavy-rains-body-recovered-20-hours-later

கடந்த சில வாரங்களாக தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சாலையில் சென்ற ஒருவர் அடித்துச் செல்லப்பட்டு, சரூர் நகர் குளத்தில் மூழ்கினார். இவரது உடல் 20 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பகவத் கூறுகையில், ''அதீத மழை பெய்ததன் காரணமாக சரூர் நகரின் தபோவன் காலனியில் விபத்து நிகழ்ந்துள்ளது. அல்மஸ்குடா பகுதியில் வசித்து வந்தவர் நவீன் குமார். இவர் தனது வேலைக்காக சரூர் நகருக்கு சென்றுள்ளார். அப்பகுதியில் அதீத மழை பெய்ததன் காரணமாக நவீன் குமார் சரூர் நகர் நீர்தேக்கத்தில் மூழ்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின்படி, உடனடியாக பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் என்டிஆர்எஃப் குழுவினர் அவரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையிலிருந்து அவரது உடல் தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படும்.

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் 20 மணி நேரத்திற்கு பின் மீட்பு

இப்பகுதிகளில் குடிமைப் பிரச்னை சார்ந்து ஏராளமான விதிமீறல்கள் நடந்துள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். அது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனித்திற்கு கொண்டு செல்லப்படும். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இதையும் படிங்க:8 இடைநீக்க எம்.பிக்களுக்கு ஆதரவாக சரத் பவார் உண்ணாவிரதம்

ABOUT THE AUTHOR

...view details