தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வீட்டின் முற்றத்தில் ஏன் மண் தோண்டுகிறீர்கள்?' - தட்டிக்கேட்டவர் கொலை - thiruvananthapuram

திருவனந்தபுரம்: தனது வீட்டின் முற்றத்தில் மண் தோண்டியதை தட்டிக்கேட்டதால் கோயில் நில உரிமையாளர் ஒருவர் ஜேசிபி இயந்திரத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

நில உரிமையாளர்
நில உரிமையாளர்

By

Published : Jan 24, 2020, 2:00 PM IST

சில நாள்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை, வனத் துறையினர் பாலம் கட்டுவதற்காக ஒரு மைதானத்தில் மணல் கொட்டி வைத்துள்ளனர். பின்பு சில நாள்கள் கழித்து ஒரு கும்பல் அங்கு வந்துள்ளனர். ஆரம்பத்தில் மண் எடுக்க வந்தவர்கள் என்று அங்குள்ளவர்கள் நினைத்துள்ளனர்.

பின்பு அந்தக் கும்பல் அனுமதி பெறாமல் அம்பலதிங்காலாவில் சங்கீத் வீட்டின் முற்றத்திலிருந்து மண்ணைத் தோண்டியுள்ளனர் உடனே தடுக்க முயன்று கேள்வி கேட்ட அவரை ஜேசிபி இயந்திரம் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சங்கீத்தை உடனே திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அப்பொழுது சோதனை செய்த மருத்துவர்கள் அவரது விலா எலும்புகள் முற்றிலுமாக உடைந்து உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இறந்தவர் அங்குள்ள கட்டகடா கோயிலின் நில உரிமையாளர் ஆவார்.

இது குறித்து, கட்டகடா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்துவருகின்றனர். தற்போது அவரது சடலம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details