தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெட்ரோல் விலையை குறைக்க கோரியவருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை குறைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றார்.

hike in fuel prices PIL on fuel prices Supreme Court on fuel prices rise in petrol prices பெட்ரோல் விலை உயர்வு பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றம்
hike in fuel prices PIL on fuel prices Supreme Court on fuel prices rise in petrol prices பெட்ரோல் விலை உயர்வு பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றம்

By

Published : Sep 8, 2020, 3:41 PM IST

டெல்லி:தினந்தோறும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகரித்துவருகிறது. இதனை கட்டுப்படுத்தி, இந்த முறையை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது மனுதாரர் தரப்பில் சாஜி ஜெ. கோடங்கந்தத் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டுமானால், நாங்கள் உங்கள் மீது மிகப்பெரிய தொகையை விதிப்போம்” என்று கூறினார்கள். மேலும் இது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க:இட ஒதுக்கீடு விவகாரத்தை விசாரிக்க சலோனி குமார் வழக்கு தடையாக இல்லை!

ABOUT THE AUTHOR

...view details