கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மல்லிகார்ஜுனா குருமத் என்பவர் பெங்களூருவிலிருந்து கால்நடையாக விஜயபுரா வரை செல்ல பயணத்தை மேற்கொண்டுள்ளார். மூன்று நாள்கள் 400 கி.மீ. நடந்து கதக் மாவட்டத்தில் முண்டர்கி என்ற நகரத்தை அடைந்துள்ளார்.
மேலும் ஏற்கனவே இவர் காணாமல்போனதாக பெங்களூருவில் உள்ள சுப்பிரமண்யா நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர் முண்டர்கி நகரில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.