உத்தரப் பிரதேசம், பிஜ்னோர் (Bijnor) அருகேயுள்ள டிக்கோபூர் கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சய் (32). இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு, வீட்டிலிருந்த மனைவியிடம் மனிதனின் கையைக் கொடுத்து சமைத்துத் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். இதைப் பார்த்த அவரின் மனைவி மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சஞ்சய்யின் மனைவி, கண் விழித்துப் பார்க்கும் போது, தனது கணவர் அந்தக் கையை சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து, தனது கணவரை வீட்டில் வைத்து பூட்டிவீட்டு அக்கம் பக்கத்தினரிடம் இத்தகவல் குறித்து தெரிவித்துள்ளார்.