உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள நகாசா காவல் துறையினர், குண்டர்கள், சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நயீம் என்பவரைப் பிடித்து தருவோருக்கு 15 ஆயிரம் ரூபாய் சன்மானம் கிடைக்கும் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தேடப்பட்டுவந்த குற்றவாளி நயீம் நேற்று முன்தினம் (செப். 27) காவல் நிலையத்திற்கு, தனது கழுத்தில் ஒரு பலகையை மாட்டிக்கொண்டு வந்தார். அதில், “நான் காவல் துறையினரைக் கண்டு அஞ்சுகிறேன், என் தவறுகளை ஒப்புகொள்கிறேன். நான் சரணடைகிறேன், என்னைச் சுட வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “கருணை கோரும் ஒரு பலகையுடன் குற்றவாளி காவல் நிலையத்தில் சரணடைவது இது முதன்முறை அல்ல; ஏற்கனவே அம்ரோஹா, கான்பூரிலும் குற்றவாளிகள் இதேபோல் சரணடைந்துள்ளனர்.