32 வயதான இளைஞர், தங்கை கணவரை கொல்ல முயற்சித்ததில் தோல்வியுற்றதால், புறநகர் கண்டிவாலியில் உள்ள தனது சகோதரியின் குடியிருப்பில் தன்னைத்தானே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள் கிழமை இரவு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த படுகேஸ்வர் திரிலோக் திவாரி, தனது சகோதரி வந்தனா (20), தங்கை கணவர் ரோஹித் (27) ஆகியோரை சந்திக்க வந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திவாரி, முதலில் ரோஹித்தை துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். அப்போது, ரோஹித் சுதாரித்ததால் துப்பாக்கிச் சூடு படாமல் உயிர் தப்பினார்.
பின்னர் ரோஹித், மனைவி வந்தனா ஆகிய இருவரும் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், திவாரி தங்கையின் வீட்டிற்குள்ளே தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், திவாரியின் தங்கை வந்தனா ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக ரோஹித்தை காதல் திருமணம் செய்து கொண்டார்.