காங்க்ரா: இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள ஜ்வாலமுகியை பகுதி கும்மர் பஞ்சாயத்தைச் சேர்ந்த குல்தீப் என்பவர் தனது குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி பெற ஏதுவாக தனது பசுவை விற்பனை செய்துள்ளார்.
குல்தீப்புக்கு நான்காம் மற்றும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள், கடந்த பல நாள்களாக, பக்கத்து வீட்டு குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று ஆன்லைனில் கல்வி கற்று வந்தனர். ஆனால் நீண்ட காலமாக இதனை தொடர முடியவில்லை.
எனவே, குல்தீப் தனது பசுவை விற்று தனது குழந்தைகள் ஆன்லைன் படிப்பைத் தொடர ஸ்மார்ட்போன் வாங்கினார். இப்போது அவரது குழந்தைகள் தங்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக பசுமாட்டை விற்று ஸ்மார்ட்போன் வாங்கிய தந்தை! குல்தீப் ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் வசித்துவருகிறார். அவரால் வேலை செய்ய முடியாது. அவரது முதுகெலும்பில் பிரச்னை உள்ளது. இதனால் அவர் பெருங்கஷ்டத்தில் உள்ளார்.
ஈடிவி பாரத்தில் குல்தீப்பின் கதையைக் கேட்ட பிறகு, பல கைகள் உதவ முன் வரத் தொடங்கியுள்ளன. இது குறித்து குல்தீப் கூறுகையில், “சிலர் தங்கள் வீட்டிற்கு ரேஷன் வழங்குவது பற்றி பேசுகிறார்கள், சிலர் என்னுடைய குழந்தைகளின் கல்விக்கான செலவுகளை ஏற்க தயாராக உள்ளனர்” என்றார்.
ஜ்வாலமுகியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரமேஷ் த்வாலாவும் குல்தீப்பின் வீட்டிற்கு வந்து, அவரின் குடும்பத்தின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு சாத்தியமான அனைத்து உதவிகளையும் உறுதிப்படுத்தினார்.
மேலும், குல்தீப்புக்கு வீடு மற்றும் பிற உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க:'நிதி நெருக்கடியில் வழக்குரைஞர்கள்'- உச்ச நீதிமன்றம் கவலை!