நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையமும் தெரிவித்திருந்தது.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு நகரத்தில் உலகிலேயே நேற்று அதிகப்படியான வெப்பநிலை பதிவாகியுள்ளது. சுமார் 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் (50 டிகிரி செல்சியஸ்) பதிவானது. இந்த வெப்பத்தில், சப்பாத்தி சில நிமிடங்களில் சுட்டுவிடலாம் என்ற தகவல் வெளியானது.
இச்செய்தி குறித்து அறிந்ததும், உடனடியாக நாம் (நமது ஈடிவி பாரத் குழு) சுரு நகரத்திற்கு விரைந்தோம். அப்போது லோஹியா கல்லூரியின் இணை பேராசிரியர் மருத்துவர் ஜே.பி. கான் உடனிருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "செவ்வாய்க்கிழமை (மே 26) உலகளவில் அதிகப்படியான வெப்பம் பதிவானதில் சுரு நகரம் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்தச் சூழலில் அடுத்த நாளே உலகிலேயே அதிகம் வெப்பம் பதிவான முதல் இடமாக சுரு நகரம் வந்தது.
கொதிக்கும் மணலில் சப்பாத்திச் சுடும் காணொலி இங்கு வெப்பநிலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக நகராட்சி ஊழியர்கள் சாலைகளில் தண்ணீரை தெளித்தனர். ஆனால் இச்செய்முறையால் வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்றார்.
இதையடுத்து, அவர் சப்பாத்தியை உண்மையாகவே சுரு நகரின் மணலில் வறுத்தெடுத்து அசத்தினார். தொடர்ந்து, சப்பாத்தி சாப்பிடுவதற்குத் தயாரானது.
இதையும் படிங்க: என் புறாவ திருப்பி கொடுங்க மோடி... பாகிஸ்தான் கிராமத்துக்காரர் கோரிக்
கை