தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தார்வாட் விபத்து: 62 மணி நேரத்திற்கு பின் உயிருடன் இளைஞர் மீட்பு - தார்வாட் இளைஞர் மீட்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில், 62 மணி நேரத்திற்கு பின் இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா கட்டட விபத்து

By

Published : Mar 22, 2019, 4:35 PM IST

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்திலுள்ள குமரேஷ்வர் நகரில் ஐந்து மாடிக் கட்டடப்பணிகள் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் மார்ச் 19ஆம் தேதி கட்டடம் எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. இந்த மோசமான விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 56 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்ட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்து குறித்து நீதிமன்ற விசாரணையை மேற்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்புப்பணியில் இடிபாடுகளின் அடியில் சிக்கியிருந்த இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். சுமார் 62 மணி நேரத்திற்கு மேலாக இடிபாடுகளில் சிக்கி பரிதவித்த இளைஞரை பேரிடர் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டது காண்போரை நெகிழ வைத்தது.

இதனிடையே கட்டட விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கட்டட உரிமையாளர்கள் மற்றும் இன்ஜினியரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details