பெண்குழந்தைகளாக பிறந்ததால் தனது கணவர் முத்தலாக் கூறி தன்னை விவகாரத்து செய்ததாக உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரைச் சேர்ந்த பெண் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
அவர் பதிவு செய்த வழக்கில், தனக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததால் எனது மாமியார் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். எனது கணவர் கடந்தாண்டு ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.