மகாராஷ்டிரா மாநிலத்தின், தானே மாவட்டத்தில் உல்ஹாஸ்நகரில் இன்று (மே25) அதிகாலை 24 வயது இளைஞர் ஒருவரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொன்றதாகத் தெரிகிறது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரைத் தேடி வருவதாக, காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது; 'இறந்து போனது அப்பகுதியைச் சேர்ந்த ஷாதாப் ஷேக் என்று அடையாளம் காணப்பட்டது. கொலை செய்ததாக சந்தேகப்படும் ஐந்து பேர் மூன்று மோட்டார் இருசக்கரவாகனங்களில் அருகிலுள்ள ஹாஜி மலாங்கைப் பார்வையிடப் புறப்பட்டிருக்கின்றனர். அதிகாலை 1:30 மணியளவில் இந்த ஐந்து பேரை நேருக்கு நேர் சந்தித்ததாக ஒரு அலுவலர் தெரிவித்துள்ளார்.