தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மது போதையில் அடாவடி; மனைவியை உயிருடன் புதைத்த கணவர்! - மனைவியை கொன்ற கணவர்

நெல்லூர்: குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

போலீஸ்
போலீஸ்

By

Published : Jun 2, 2020, 6:03 PM IST

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட் பாலம் கிராமத்தில் வசித்து வருபவர் சுபாஷினி. இவர் தனது மூன்றாவது கணவரான சுவாமுலு என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மே 27ஆம் தேதி சுவாமுலு மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றி, மனைவியைக் கடுமையாகத் தாக்கி உள்ளார்.

இதில் சுபாஷினி, சுயநினைவு இழந்து கீழே விழுந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக நினைத்து வீட்டிற்கு அருகிலேயே குழி தோண்டி புதைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கோடவலூரு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர். பின் புதைக்கப்பட்டிருந்த சுபாஷினி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் முடிவில், சுபாஷினி உயிருடன் புதைக்கப்பட்டிருப்பது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுவாமுலு மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details