ஹைதராபாத்: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் இளைஞர் ஒருவர், நகைக்காக தனது சொந்த தாயைம், சகோதரியையும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மெட்சல் நகரை சேர்ந்த பிரபாகரன் ரெட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். தற்போது, அவரின் மனைவி சுனிதா(42), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சாய்நாத் ரெட்டி என்ற மகனும், அனுஷா என்ற மகளும் உள்ளனர். இதில், சாய்நாத் எம்.டெக் படித்தபடியே பகுதி நேர வேலை பணியாற்றுகிறார். அனுஷா, பார்மசி பயின்று வருகிறார்.
சாய்நாத்துக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக, வங்கியிலிருந்த தந்தையின் காப்பீடு பணமான ரூபாய் 20 லட்சத்தை, தாயாருக்கு தெரியாமல் எடுத்து அதனை கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இருப்பினும் ஆசை தீராத சாய்நாத், வீட்டிலிருந்த நகையை விற்று பணத்தை பெற முயற்சி செய்துள்ளார். இதையறிந்த சுனிதாவும் அனுஷாவும், சாய்நாத்தை கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சாய்நாத், இருவரையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.