தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.-யில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு! - Man killed in horrific hit-and-run in Ghaziabad, video goes viral

உத்தரப் பிரதேசம்: சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Road accident
Road accident

By

Published : Jun 8, 2020, 6:13 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம் சிரோலி கிராமத்தில் சாலையோரம் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, அந்தக் காரை ஓட்டி வந்தவர், காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கார் மோதி விபத்து நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details