தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மதுவுக்காக சுவர் ஏறி குதித்த தனிமைப்படுத்தப்பட்டவர் கைது! - quarantine to buy liquor Arrest

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர் மதுபானம் வாங்க வெளியில் சென்றதாக அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

liquor  COVID-19 lockdown  Coronavirus outbreak  COVID-19 scare  Coronavirus crisis  வீட்டு தனிமைப்படுத்தல்  மது வாங்க சென்ற கணவர் கைது  இமாச்சலப் பிரதேசத்தில் மது வாங்க சென்றவர் கைது
quarantine to buy liquor Arrest

By

Published : May 12, 2020, 9:47 AM IST

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதர்ஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். இந்தச் சூழலில் கரோனா பரவல் அடிப்படையில் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆதர்ஷ் கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டின் சுற்றுச் சுவர் ஏறி குதித்து தனது சகோதரருடன் பார்சார் பகுதிக்கு மதுபானம் வாங்கச் சென்றுள்ளார். இது குறித்து ஆதர்ஷின் மனைவி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

அதனடிப்படையில், காவல் துறையினர் ஆதர்ஷ் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித் துறைக்குப் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காவலர்களே சட்டவிரோதமாக மது விற்பனை

ABOUT THE AUTHOR

...view details