தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பசுஞ் சாணத்தில் குளித்து, கோமியம் குடிக்கும் கிராமவாசி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள பிச்சி கிராமத்தில் வசிக்கும் கன்ஷ்யம் பிலாஸ் என்பவர் பசுஞ் சாணத்தில் குளித்து கோமியம் குடித்து வருவது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

north indian
north indian

By

Published : Apr 30, 2020, 3:41 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் கோட்வாலி அருகே உள்ள பிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஷ்யம் பிலாஸ். இவர், பசுஞ் சாணத்தில் குளித்து அடிக்கடி கோமியத்தையும் குடித்து வருகிறார். இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்காக கன்ஷ்யம் கூறுகையில், "எனது தாத்தா தான் எனக்கு பசுஞ் சாணத்தில் குளிக்க தூண்டுதலாக இருந்தார்.

நான் 2016ஆம் ஆண்டிலிருந்து பசுஞ் சாணத்தில் குளிக்கத் தொடங்கினேன். அவ்வாறு குளிப்பதால் உடல் ரீதியாக எந்தவிதப் பிரச்னையையும் சந்திப்பதில்லை என உணர்கிறேன். அது என்னை நோய்களிலிருந்து காப்பாற்றும் என நம்புகிறேன். நான் பசுவின் கோமியத்தை மிகவும் விரும்பி அருந்துவேன். 2016-2017ஆம் ஆண்டுகளில் அடிக்கடி அருந்தியுள்ளேன்.

ஆனால் தற்போது பசுவின் கோமியம் கிடைக்காததால், பசுஞ் சாண குளியல் மட்டும் செய்து வருகிறேன். வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு குளிக்குமாறு நான் மக்களுக்கு அறிவுறுத்துகிறேன். நிச்சயமாக எனக்கு கிடைத்த அதே பலனை அவர்கள் பெறுவார்கள்" என்று கன்ஷ்யம் பிலாஸ் கூறினார்.

கன்ஷ்யம் பற்றி அவரது நண்பர் தினேஷ் பியார் கூறுகையில், "2016-17 முதல் அவரை நாங்கள் அறிவோம். அவர் தினமும் சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு குழாயில் குளிப்பதை நாங்கள் காண்கிறோம். அவர் பசுவின் கோமியத்தை குடிப்பார். தினமும் காலையில் பசுஞ் சாணத்துடன் குளிப்பார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:தவீந்தர் சிங் வழக்கில் மேலும் ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details