நாகலாந்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தேனீக்கள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். வடகிழக்கு மாநிலங்களில் நாகலாந்து தேனீக்களுக்கும் தேன் வளர்ப்புக்கும் மிகவும் பிரபலமான ஒன்று. தேனீக்கள் தினம் கொண்டாட இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்
இது எப்படி சாத்தியம்... குழப்பமடைந்த அமைச்சர்!
நாகலாந்து: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெளியிட்ட ஒரு வீடியோவால் நெட்டிசன்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அந்த வீடியோவில், ஒரு இளைஞர் அணிந்திருக்கும் பேண்ட்-ன் பின்புறம் தேன் கூடு கட்டியிருக்கிறது. இதனை அந்த இளைஞரின் அருகில் இருக்கும் சக நண்பர்கள் அவரை பார்த்து கிண்டலாக சிரிக்கின்றனர். மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ, தனது ட்விட்டரில் தவறான இடத்தில் தேன் கூடு, நாகலாந்தில் மட்டுமே இது சாத்தியம்? என்ற கேள்விக்குறியுடன் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சற்று குழப்பம் அடைந்துள்ளனர். இது எப்படி முடியும் ரொம்ப குழப்பமா இருக்கு என்றும் கூறி வருகின்றனர்.
முதலில் இந்த வீடியோவை நாகலாந்து எம்எல்ஏ கிகோன் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வாட்ஸ் ஆப் மூலம் கிடைத்தது என்றும் சரியாக எந்த பகுதி என்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பார்ப்பதற்கு விநோதமாக இருக்கும் இந்த வீடியோ, இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது.