சகோதரரின் மனைவியை திருமணம் செய்ய எதிர்ப்பு: இருவர் தூக்கிட்டு தற்கொலை!
ராஜஸ்தான்: சகோதரரின் மனைவியை திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம், தவ்ஸா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்னா (25). இவருக்கு திருமணமாகி கணவர் இறந்த நிலையில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கன்னாவை தன் கணவரின் சகோதரர் ஹர்கேஸ் (22) கவனித்து வந்தார்.
இதனால், கன்னாவும் ஹர்கேஸும் நெருங்கி பழகி வந்தநிலையில் இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்தனர்.
இதையறிந்த ஹர்கேஸின் குடும்பத்தினர் இருவரையும் கண்டித்தனர். இதன் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உறவினர்கள், குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
ஆனால், அதற்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இருவரும் தனித்தனி அறைகளில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மறுநாள் இதைக் கண்ட குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து லாவான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விறகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, இருவரது உடல்களும் உடற்கூறாய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.