கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள தினசரி கூலிகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. அதனால் பைடோனி பகுதி சகலா தெருவில் சாலையோரம் வசிக்கும் தினக்கூலிகளுக்கு முகமது சயீத் ஷேக்(24) என்பவர் டீ, பிஸ்கட் வழங்கினார்.
தினக்கூலிகளுக்கு உணவளித்த நபருக்கு கத்திக்குத்து - corona update news
மகாராஷ்டிரா: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தினக்கூலிகளுக்கு உணவளித்த நபரை கத்தியால் குத்தியவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
stabbed-injured
அப்போது அங்கு வந்த சிலர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். வாக்குவாதம் முற்றவே அந்த நபர்கள் முகமது சயீத் ஷேக்கை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். மேலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு!