தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடிபோதையில் எட்டு மாத குழந்தையை தாக்கிய தந்தை கைது! - மனைவி மீது கணவன் தாக்குதல்

திருவனந்தபுரம்: குடிபோதையில் எட்டு மாத குழந்தையை தாக்கிய தந்தையை காவலர்கள் கைதுசெய்தனர்.

man attack child
man attack child

By

Published : Jul 4, 2020, 10:40 AM IST

கேரள மாநிலம், திரிபுனித்துரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்(35). இவருக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.
தினக் கூலி வேலை பார்க்கும் இவர் தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
கடந்த சில நாள்களாகவே இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஆனந்த் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த அவர் மனைவியை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். இறுதியில், அவர் மனைவியிடமிருந்து எட்டு மாத பெண் குழந்தையை பிடிங்கி தாக்கியுள்ளார்.
இது குறித்து மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்கப்பதிவு செய்து ஆனந்தை கைதுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details