தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமரை திட்டிய முதியவருக்குச் சிறை - சிஏஏ போராட்டம் தற்போதைய செய்தி

மும்பை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பிரதமர் மோடியை தகாத வார்த்தையில் திட்டியதாக மகாராஷ்டிராவில் முதியவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

MAHARASHTRA ARREST
MAHARASHTRA ARREST

By

Published : Mar 9, 2020, 11:45 PM IST

Updated : Mar 10, 2020, 7:32 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மகாராஷ்டிராவின் ஃபார்பானி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சமீபத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டம் தொடர்பாகச் சமூக வலைதளத்தில் வெளியான காணொலியில், ஷேக் ரஹ்மான் என்ற 62 வயது முதியவர் பிரதமர் நரேந்திர மோடியை தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்று காட்சி அமைந்திருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு பாஜக தொண்டர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 294 (பொது இடத்தில் தகாத வார்த்தைகள் பேசுவது, தகாத முறையில் நடந்துகொள்வது) பிரிவில் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க : அமெரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பியவருக்கு கொரோனா!

Last Updated : Mar 10, 2020, 7:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details