கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள குண்டாரா பகுதியில் வசித்து வந்தவர் சுஜு. இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓடடுநராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராக்கி, மகன் ஆதி (வயது 3).
மகனுடன் தற்கொலை செய்துகொண்ட பெண் : விரக்தியில் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை! - கேரளா குற்றச் செய்திகள்
திருவனந்தபுரம்: கேரளாவில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அவரது கணவரும் துாக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், இதனால் விரக்தியடைந்த ராக்கி தனது மகனுடன் அஷ்டமுடி உப்பங்கழியில் குதித்து உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, அவர்களின் உடல்கள் நேற்று (அக். 26) மீட்கப்பட்டன. இந்நிலையில், மனைவி தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாள முடியாமல், சுஜுவும் தனது வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.